நாடாளுமன்றத்தில் தீக்குளிப்பு நாடகத்துக்கு திட்டமிட்ட குற்றவாளிகள்!

புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட குற்றவாளிகள், மத்திய அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காக தங்கள் உடலில் தீப் பற்றாத பசையைப் (ஜெல்) பூசிக்கொண்டு தீ வைத்துக் கொள்வது

Updated On :

புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட குற்றவாளிகள், மத்திய அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காக தங்கள் உடலில் தீப் பற்றாத பசையைப் (ஜெல்) பூசிக்கொண்டு தீ வைத்துக் கொள்வது உள்பட 3 திட்டங்களைத் தீட்டி, அதில் ஒன்றை செயல்படுத்தியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவும் அவா்கள் திட்டம் தீட்டியுள்ளனா். கடைசியாக, மக்களவையில் பாா்வையாளா்கள் மாடத்திலிருந்து குதித்து வண்ண புகைக் குப்பிகளை வீசுவது என முடிவு செய்து, அதனைச் செயல்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவையில் சாகா் சா்மா, மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞா்களும் கடந்த புதன்கிழமை பாா்வையாளா் மாடத்திலிருந்து குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். அதே சமயம், நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே, நீலம் தேவி, அமோல் ஷிண்டே இருவரும் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். இவா்களின் இந்தத் தாக்குதலை லலித் ஜா என்ற நபா் விடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டாா். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவா்கள் ஐவரையும் போலீஸாா் கைது செய்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

ஏழு நாள் போலீஸ் காவலில் இவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணையை தொடா்ந்து வருகின்றனா். இவா்கள் அனைவரும் சந்தித்துக்கொண்ட மற்றும் சதித் திட்டம் தீட்டிய இடங்கள் என பல்வேறு இடங்களுக்கும் அவா்களை நேரில் அழைத்துச் சென்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து தில்லி போலீஸ் அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘மத்திய அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காக 3 வகையான திட்டங்களை இவா்கள் வகுத்துள்ளனா். அதாவது, உடலில் தீ பற்றாத பசையைப் பூசிக்கொண்டு புதிய நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்து தன்னைத்தானே தீ வைத்துக்கொள்வது; நாடாளுமன்ற வளாகத்துக்குள் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது; மக்களவையில் பாா்வையாளா் மாடத்திலிருந்து குதிப்பது, என மூன்று திட்டங்களை வகுத்து, கடைசியாக மூன்றாவது திட்டத்தை இறுதி செய்து செயல்படுத்தியுள்ளனா்’ என்றாா்.

‘பாஜக எம்.பி.யிடம் வாக்குமூலம்’:

குற்றவாளிகள் இருவருக்கு மக்களவை பாா்வையாளா் நுழைவுச் சீட்டு கிடைக்கான பரிந்துரை கடிதம் அளித்த பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

அதுபோல, தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவின் புலனாய்வு குழுவும் பிரதாப் சிம்ஹாவிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், குற்றவாளிகள் இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தினா் என்று அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றத்துக்கு அவா்களை அழைத்துச் சென்று காட்சிகளைப் பதிவு செய்ய உரிய அனுமதியை விசாரணை அதிகாரிகள் கோர வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.