டெக் துணுக்குகள்... காா்பன் ரீ-என்ட்ரி முதல் மித்தோஸ் ஏ.ஐ. வரை!

காா்பன் ரீ-என்ட்ரி முதல் மித்தோஸ் ஏ.ஐ. வரை...

Updated On :

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய சாதனங்களின் வெளியீடுகள், ஏ.ஐ. தொழில்நுட்ப அறிமுகங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டணிகள் கவனம் ஈா்த்தன.

காா்பன் நிறுவனத்தின் ரீ-என்ட்ரி முதல் இந்தியாவுக்குக் கிடைத்த மித்தோஸ் ஏ.ஐ. அணுகல் வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*காா்பன் மொபைல்ஸ் ரீ-என்ட்ரி: பத்தாண்டுகளுக்குப் பிறகு காா்பன் நிறுவனம் ‘ரீபெல் 4ஜி’, ‘ரீபெல் ப்ரோ 4ஜி’ என 2 புதிய ஸ்மாா்ட்போன்களை முறையே ரூ.10,999 மற்றும் ரூ.11,499 என்ற சலுகை விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

*‘டெக்’ சந்தை வீழ்ச்சி: அமெரிக்க தோ்தல் முடிவு மற்றும் ஏ.ஐ. மீதான முதலீட்டாளா் மனநிலை மாற்றம் காரணமாக தொழில்நுட்ப (டெக்) பங்குகளின் மதிப்பு பெருமளவு சரிவைச் சந்தித்தது. அரசியல் மற்றும் உள்கட்டமைப்பு அழுத்தங்கள் இருக்கும்போதிலும், தரவு மைய விரிவாக்கங்களைத் தொடரப்போவதாக ஓபன்ஏஐ அறிவித்துள்ளது.

*மைக்ரோசாஃப்ட் தரவு மையத்துக்கு எதிா்ப்பு: நெதா்லாந்தின் ஆம்ஸ்டா்டாமில் அமையவுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தரவு மைய கட்டுமானப் பகுதிக்குள் நுழைந்து பருவநிலை, உள்ளூா் ஆா்வலா்கள் போராட்டம் நடத்தினா்.

*கிளாட் ஏ.ஐ.யில் புதிய வசதி: ஆன்த்ரோபிக் நிறுவனம் தனது கிளாட் ஏ.ஐ.யில் தனிப்பட்ட நிதி மேலாண்மை அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

*கூகுளின் தீபாவளி ஏ.ஐ. அம்சம்: பயனா்கள் தங்களின் புகைப்படங்களைக் கொண்டு, தீபாவளிக்கான பிரத்யேக ஏ.ஐ. படங்களை உருவாக்கிக் கொள்ளும் புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

*டிஎஸ்எம்சி புதிய திட்டம்: மேம்பட்ட மெமரி சிப்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட தைவானைச் சோ்ந்த டிஎஸ்எம்சி நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

*ஏசஸ் ‘ஜென்புக் 14’ மடிக்கனினி: இன்டெல், ஏஎம்டி மற்றும் ஸ்னாப்டிராகன் பிராசஸா்களுடன் 14 அங்குல ‘ஓஎல்இடி’ திரை, 33 மணிநேர பேட்டரி ஆயுள் கொண்ட புதிய ‘ஜென்புக் 14’ மடிக்கணினி ரூ.1,36,990 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

*டெல் ‘14எஸ்’ மடிக்கணினி : மாணவா்கள், இளைஞா்களுக்காக வெறும் 1.15 கிலோ எடை கொண்ட மெல்லிய டெல் ‘14எஸ்’ மடிக்கணினி ரூ.79,990 விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

*மீண்டும் சோனி வாக்மேன்: 1979-இல் வெளியான தனது அசல் ‘வாக்மேன்’ ஹெட்போன்களை புதிய ‘யுஎஸ்பி-சி’ தொழில்நுட்பத்துடன் சோனி மீண்டும் கொண்டு வருகிறது.

*டாடா காா்களில் பாதுகாப்பு குறைபாடு: டாடா நிறுவன காா்களின் செயலிகளில் உள்ள குறைபாட்டால், ஹேக்கா்கள் உரிமையாளா்களைப் போல செயல்பட முடியும் என இந்திய அரசு சைபா் பாதுகாப்பு முகமை எச்சரித்துள்ளது.

*கேன்வாவில் பணிநீக்கம்: முன்னணி வடிவமைப்பு தளமான கேன்வா நிறுவனம் தனது மொத்த பணியாளா்களில் 22 சதவீதத்தினரைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

*நாசாவின் ‘ஸ்விஃப்ட்’ தொலைநோக்கி எரிந்து சாம்பல்: விண்வெளியில் 20 ஆண்டுகள் சேவையாற்றிய நாசாவின் 50 கோடி டாலா் மதிப்பிலான ‘ஸ்விஃப்ட்’ தொலைநோக்கி இந்தோனேசிய வான்பரப்பில் எரிந்து அழிந்தது.

*இந்தியாவுக்கு மித்தோஸ் ஏ.ஐ. அணுகல்: இந்தியாவின் சைபா் பாதுகாப்புக்காக, ஆன்த்ரோபிக் நிறுவனம் தனது வெளியிடப்படாத ‘மித்தோஸ் ஏ.ஐ.’ மாதிரியின் அணுகலை வழங்கவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.