டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சபரிமலை கோயிலின் வருவாய்... இத்தனை கோடியா?

சபரிமலையின் பக்தர்கள் காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை மூலம் ஈட்டப்பட்ட தொகை இவ்வளவு என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

News image

கோப்பு

Updated On :26 டிசம்பர் 2023, 2:51 pm IST

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மண்டல மற்றும் மகர பூஜைகள் நடைபெறும் இந்தப் பருவத்தில், சபரிமலை கோயிலின் வருவாயைth திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தப் பருவம் தொடங்கிய 39 நாள்களில் (டிச.25 வரை) ரூ.200 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தேவஸ்தானத்தின் தலைவர் பி.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

காணிக்கையாக அளிக்கப்பட்ட சில்லரைகள் எண்ணப்படும்போது இந்த மதிப்பு இன்னும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மொத்த வருவாயான ரூ. 204.30 கோடியில் ரூ.63.89 கோடி பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டது. அரவணை பாயாசம் விற்பனையின் மூலம் ரூ.96.32 கோடியும் அப்பம் விற்பனையின் மூலம் ரூ.12.38 கோடியும் ஈட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முறை 31 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஐயப்பனைத் தரிசிக்க வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நெருக்கடியான மக்கள் திரள் இருந்தபோதும் தேவஸ்தானம் அதன் வரையறைக்குட்பட்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தியதாக பிரசாத் தெரிவித்துள்ளார்.

மண்டல பூஜைக்குப் பின்னர் கோயில், புதன்கிழமை இரவு 11 மணியோடு மூடப்படவுள்ளது. அதன் பிறகு டிச.30 மகரவிளக்கு பூஜைக்காகத் திறக்கப்படும். ஜன. 15 சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.