குழந்தை திருமணத்தை முறியடித்த அசாம்: 3 நாள்களில் 2,441 பேர் கைது!

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக கடந்த மூன்று நாள்களில் மொத்தம் 2,441 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தை திருமணத்தை முறியடித்த அசாம்: 3 நாள்களில் 2,441 பேர் கைது!

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக கடந்த மூன்று நாள்களில் மொத்தம் 2,441 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குழந்தை திருமணம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட 4,074 எஃப்ஐஆர்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக துப்ரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 374 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஹோஜாய் 255 மற்றும் மோரிகான் 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பிஸ்வநாத் மாவட்டத்தில் 139 பேரும், அதைத் தொடர்ந்து பார்பேட்டாவில் 130 பேரும், துப்ரியில் 126 பேரும், பக்சா 123, போங்கைகான் மாவட்டத்தில் 117 கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. 

இந்த அடக்குமுறைக்கு எதிராக பராக் பள்ளத்தாக்கில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து ஏஐஎம்ஐஎம்.யின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், 

குழந்தை திருமண பிரச்னையை தீவிரமாக கண்காணித்திருந்தால், அசாம் அரசு எழுத்தறிவு அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். குழந்தை திருமணங்களை நிறுத்த வேண்டுமானால் நிறைய பள்ளிகளைத் திறக்க வேண்டும் ஆனால், அரசு அதைச் செய்யவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 

அசாமில் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் அதிகமாவதற்கு குழந்தைத் திருமணமே முதன்மையான காரணம் என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்(என்எப்எச்எஸ்) அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com