தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஜன. 30, 31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுஎஃப்பியு தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜனவரி 2023, 3:55 pm

வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இது குறித்து நடைபெற்ற யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எங்கள் கோரிக்கைகளுக்கு இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து இது வரையிலும் எந்த பதிலும் வராததால், நாங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கவும், அதாவது ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாவது,

வாரத்தில் ஐந்து நாட்கள் பணி, ஓய்வூதியம் புதுப்பித்தல், எஞ்சிய பிரச்னைகள், தேசிய ஓய்வூதிய முறையை ரத்து செய்தல், ஊதிய உயர்வு கோரிக்கைகள் மீதான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குதல், போதுமான ஆட்சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.