தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஹிமாசலில் ஒரேநாளில் இரண்டு முறை நிலநடுக்கம்

ஹிமாசலில் ஒரேநாளில் இரண்டு முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். 

News image
Updated On :14 ஜனவரி 2023, 10:29 am

ஹிமாசலில் ஒரேநாளில் இரண்டு முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். 

ஹிமாசல பிரதேச மாநிலம், காங்க்ரா மாவட்டத்தில் இன்று காலை 5.10 மணிக்கும் அதைத்தொடர்ந்து 5.17 மணிக்கும் இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதில் ஒரு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தர்மசாலா நகரத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும் 5 கிமீ ஆழத்திலும் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. எனினும் இந்த நிலநடுத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

ஒரேநாளில் இரண்டு முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஹிமாசலில் மக்கள் பீதியடைந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.