ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம். ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்
ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம். ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

அந்த விமானத்தை இயக்கிய விமானியின் உரிமத்தை தற்காலிகமாக ரத்துசெய்தும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நியூ யார்க் - தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது மது சங்கர் மிஸ்ரா என்பவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நியூ யார்க் - தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த நபருக்கு 30 நாள்கள் விமானத்தில் பறப்பதற்கு மட்டும் தடை விதித்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தவரை கைது செய்யாதது குறித்து விளக்கம் அளிக்கக்கோரி தில்லி காவல் துறை, விமான போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியாவுக்கு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கிடையே வெளிநாட்டுக்கு சங்கர் மிஸ்ரா தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்த சங்கர் மிஸ்ராவை கடந்த வாரம் காவல்துறையினர் கைது செய்து, தில்லி அழைத்து வந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com