டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மரபணு சோதனைக்கு எத்தனை நாள்? காத்திருக்கும் தினக்கூலிகள்

ஒடிசா ரயில் விபத்தில் 289 பேர் பலியான நிலையில், கிட்டத்தட்ட 90 பேரின் உடல்கள் இன்னமும் அடையாளம் கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமலேயே உள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2023, 9:40 am

DIN

மரபணு சோதனைக்கு எத்தனை நாள்கள் ஆகும்? வலி தரும் காத்திருப்பு
ஒடிசா ரயில் விபத்தில் 289 பேர் பலியான நிலையில், கிட்டத்தட்ட 90 பேரின் உடல்கள் இன்னமும் அடையாளம் கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமலேயே உள்ளது.

ஜூன் 2ஆம் தேதி நடந்த ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களில் 208 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால், சில உடல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சொந்தம் கொண்டாடுவதால், மரபணு சோதனைக்குப் பிறகே அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துபோன உடல்களை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பது என்று மாநில அரசு முடிவெடுத்துவிட்டது.

ஆனால், மரபணு சோதனைக்கு வரும் உறவினர்கள், பல மாநிலங்களிலிருந்து வந்திருந்து சோதனை முடிவுக்காக காத்திருப்பது, அவர்களது வேதனையை அதிகரித்துள்ளது.

பிகாரைச் சேர்ந்த விஜேந்தர், தனது ஒரே ஒரு மகன் சூரஜ் (21) விபத்தில் இறந்துவிட்டதை அறிந்து, அக்கம் பக்கத்தில் கடன் வாங்கிக் கொண்டு ஒடிசாவுக்கு வந்தார். தனது மகனின் உடலை சரியாக அடையாளம் காட்டியும், உடலில் இருந்த ஆதார் அட்டையும் இவர் சொன்ன அடையாளங்களும் சரியாக இருந்தும், எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் உடலை அவரால் பெற முடியவில்லை.

ஜூன் 5ஆம் தேதி மரபணு சோதனை நடத்தி, 2 நாள்களில் வரும்,  5 நாள்களில் வரும் எனச் சொல்லியே ஒரு வாரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், மரபணு சோதனை எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியவில்லை. நான் ஒருதினக்கூலி, 10 நாள்களுக்கும் மேல் வேலைக்கும் போகாமல் இங்கே கிடைத்ததை சாப்பிட்டு காத்திருக்கிறேன். எப்படி உடலை வாங்கிக் கொண்டு ஊர் திரும்புவேன் என்று கூட புரியவில்லை என்கிறார் கண்ணீரை துடைத்தபடி.

இதுபோலவே, தனது சகோதரன் கிருஷ்ணா (20) உடலை வாங்க வந்த அண்ணனும் 10 நாள்களுக்கும் மேல் மருத்துவமனை வாசலில் தவம் கிடக்கிறார். தனது சகோதரன் கைகளில் பச்சை குத்தியிருந்ததை வைத்து நான் அடையாளம் கண்டுவிட்டேன். ஆனால், அவனது உடலைப் பெற மரபணு சோதனை முடிவுகள் வர வேண்டும் என்று காத்திருக்கிறேன்.  ஒரு மரபணு சோதனை முடிவு வருவதற்கு எத்தனை நாள்கள் ஆகும் என்றே எங்களுக்குத் தெரியவில்லை என்கிறார் கவலையோடு.

இதுபோலவே மருத்துவமனை வாசலில் கலங்கிய கண்களோடு காத்திருக்கிறார்கள் தினக்கூலிகள். 

இவ்வளவு கால தாமதம் ஆவதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று கேட்டால், அதற்கு கிடைக்கும் பதில், உயிரிழந்து ஒரு சில நாள்களுக்குப் பிறகுதான் உடல்களிலிருந்து மரபணு எடுக்கப்பட்டிருக்கும். எனவே, உடலிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுவின் துல்லியத்தன்மை சற்றுக் குறைவாக இருக்கும். கிட்டத்தட்ட நாங்கள் 75 மரபணுக்களை சோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். இதற்கு நிச்சயம் 10 முதல் 15 நாள்கள் வரை ஆகும். இதிலும் எத்தனை மரபணுக்கள் ஒத்துப்போகின்றன என்பதை உறுதியாகக் கூற முடியாது. சிலரது பெற்றோருக்கு பதிலாக உறவினர்கள்தான் மரபணு சோதனைக்கு உள்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ரத்த தொடர்புடையவர்களின் மரபணுக்கள்தான் துல்லியமாக ஒத்துப்போகும். எனவே உறவினர்களின் மரபணுக்களை சோதிப்பதிலும் பிரச்னைகள் உள்ளன என்று கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.