தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி பல லட்சம் பணம், நகை மோசடி: 2 பேர் கைது

சமூக லைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி பல லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை மோசடி செய்தவர்களை போலீசார் தில்லியில் கைது செய்தனர்.

பெண்ணிடம் பணம் மற்றும் நகை மோசடி செய்த மாத்யூ ஜோஸ், ஷகீர்.

Published On :

கம்பம்: தேனி மாவட்டம் அருகே உள்ள குமுளியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் முகநூல் உள்ளிட்ட சமூக லைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி பல லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை மோசடி செய்தவர்களை போலீசார் தில்லியில் கைது செய்தனர்.

கேரளம் மாநிலம் பாலாவைச் சேர்ந்தவர் மாத்யூ ஜோஸ் (34), இவர் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் வேலை பார்த்த ஊழியர் குமுளியைச் சேர்ந்த ஷகீர்(24). 

இவர்கள் இருவரும் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திருமணமான பெண்களிடம் நட்பு வைத்து பழகினர். அப்படி பழக்கத்தின் போது ஹரியாணாவைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் பழக்கமாகி உள்ளார். அவரை குமுளிக்கு வரவழைத்து இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பின்னர் அவரை ஆபாச படமெடுத்து மிரட்டி அவரிடம் 600 கிராம் தங்கம், ரூ.34 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும், ஆபாச படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்றனராம். 

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் குமுளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குரியா கோஸ் உத்தரவுப்படி, காவல் ஆய்வாளர் டி.டி.சுனில் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் தேடுவது தெரிந்ததும் இருவரும் தலைமறைவாகினர். 

இருவர் மற்றும் அவரது உறவினர்களின் செல்போன்களை கண்காணித்த குமுளி போலீசார், தில்லியில் தங்கியிருந்த அவர்களை கைது செய்து வியாழக்கிழமை குமுளிக்கு அழைத்து வந்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பீர்மேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் ஏமாற்றிய பெண்களின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.