மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரயில்வே பணிக்கு லஞ்சம்: ராப்ரியைத் தொடர்ந்து லாலுவிடம் சிபிஐ விசாரணை

ராப்ரி தேவியிடம் நேற்று விசாரணை நடத்திய சிபிஐ, இதே வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவிடம் இன்று விசாரணையைத் தொடங்கியது.

News image
Updated On :7 மார்ச் 2023, 7:52 am

DIN

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியிடம் நேற்று விசாரணை நடத்திய சிபிஐ, இதே வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவிடம் இன்று விசாரணையைத் தொடங்கியது.

இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகள் என்று கூறப்பட்டிருக்கும் லாலு பிரசாத், ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி உள்ளிட்டவர்களுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. இந்த நிலையில், தில்லியில் உள்ள மிசா பாரதி இல்லத்தில் செவ்வாயன்று லாலு பிரசாத்திடம் சிபிஐ விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில் பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவியிடம் சிபிஐ திங்கள்கிழமை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

இதுதொடா்பாக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரம்:

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சோ்ந்த சிலா் நியமிக்கப்பட்டனா். அதற்குக் கைம்மாறாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான நிலம், லாலுவின் குடும்பத்தினா் மற்றும் தனியாா் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடா்ந்து அந்த தனியாா் நிறுவனத்தையும் லாலு குடும்பத்தினா் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனா். இதுபோல பாட்னாவில் சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலத்தை லாலு குடும்பத்தினா் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனா். அந்த நிலத்தை அப்போதைய சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கியுள்ளனா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடா்பாக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள லாலு பிரசாத், அவரின் குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்டோரை மாா்ச் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், பாட்னாவில் உள்ள ராப்ரி தேவி வீட்டில், அவரிடம் சிபிஐ குழு திங்கள்கிழமை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. அதேவேளையில் வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக லாலு பிரசாதிடம் விசாரணை நடத்த சிபிஐ நோட்டீஸ் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.