குப்பையில்லா தூய்மையான சூழலுக்கு வழிவகுக்கும் உ.பி. அரசு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏழு மாநகராட்சிகளிலிருந்து 9 லட்சம் டன் கழிவுகளை அகற்றத் தயாராக வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 
குப்பையில்லா தூய்மையான சூழலுக்கு வழிவகுக்கும் உ.பி. அரசு!
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏழு மாநகராட்சிகளிலிருந்து 9 லட்சம் டன் கழிவுகளை அகற்றத் தயாராக வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 

காசியாபாத்தில் 2.72 லட்சம் டன்கள், அலிகரில் 4.7 லட்சம் டன்கள், அயாத்தியில் 50,015 டன்கள், ஜான்பூரில் 74,869, சுல்தான்பூரில் 51,237 டன்கள்இ தாத்ரியில் 20,388 மற்றும் தாகுர்த்வாராவில் 14,384 டன்கள் என எழு நகரங்களில் ரூ.4603 லட்சத்திற்கும் அதிகமான செலவில் இந்த முழுத் திட்டம் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. 

அதேசமயம் மாநிலத்தின் நான்கு நகரங்களில் தனித்தனியாக ஈரக்கழிவு பதப்படுத்தும் ஆலைகள் அமைக்க அரசு தயாராகி வருகிறது. 

பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் நகர் (சந்தௌலி), மஞ்சன்பூர் (கௌசாம்பி), ஷிகோஹாபாத் (ஃபிரோசாபாத்) மற்றும் பெல்ஹா பிரதாப்கர் (பிரதாப்கர்) ஆகியவை இதில் அடங்கும்.

உ.பி.யின் தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, ஏழு நகரங்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கான டிபிஆருக்கு ஒப்புதல் அளித்து, மாநில அளவிலான குழுவுக்கு அனுப்பியுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பல்வேறு சவால்களைச் சமாளிக்க, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றப் புதுமையான முறைகளைப் பயன்படுத்துவதில் மாநில அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

இது மாநிலம் தூய்மையான மற்றும் பசுமையான சூழலுக்கு வழி வகுக்கும் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com