துரோகிகளிடம் எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது? உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர மாநில அரசியல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பதிலளித்துள்ளார்.
துரோகிகளிடம் எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது? உத்தவ் தாக்கரே
துரோகிகளிடம் எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது? உத்தவ் தாக்கரே

மும்பை: அது எப்படி காட்டிக்கொடுத்த துரோகிகளிடமே சென்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடியும் என்று, மகாராஷ்டிர மாநில அரசியல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பதிலளித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல், அதற்கு முன்னதாகவே, முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துவிட்டதால், அதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, முந்தைய நிலையை கொண்டு வர முடியாது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று உத்தரவில் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசியிருக்கும் உத்தவ் தாக்கரே, ஒரு வேளை நான் செய்தது பிழையாகக் கூட இருக்கலாம், ஆனால், அது எப்படி.. என்னைக் காட்டிக் கொடுத்த துரோகிகளிடமே சென்று நம்பிக்கை வாக்கெடுப்புக் கோர முடியும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதேவேளையில், மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே அரசு கலைக்கப்பட்டது தொடர்பாக, ஆளுநர் எடுத்த முடிவுகள் உள்ளிட்ட பல விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தனது கடுமையான கருத்துகளையே பதிவு செய்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் அளித்த தீர்ப்புக்குப் பிறகு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் தற்போதைய அரசுக்கு கொஞ்சமாவது நீதி, நியாயம் இருந்தால், "நான் செய்ததைப் போல (ஜூன் 2022 இல்) இந்த அரசும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்" என்றும் தாக்கரே கோரியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com