
கோப்புப்படம்
நாட்டில் கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,009 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,580 பேருக்கு தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.49 கோடி (4,49,76,599) ஆக உள்ளது.
மேலும், கேரள உள்பட தொற்று பாதித்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,31,753 ஆக பதிவாகியுள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 18,009 ஆகக் குறைந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.77 சதவீதமாக உள்ளது.
இதுவரை நாட்டில் 220.66 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.