நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் சின்னமாக காங்கிரஸ் திகழ்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்

ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் சின்னமாக காங்கிரஸ் கட்சி திகழ்ந்து வருவதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

Published On :2 பிப்ரவரி 2024, 8:53 am IST

ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் சின்னமாக காங்கிரஸ் கட்சி திகழ்ந்து வருவதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்.25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் கடுமையாக மோதி வருகின்றன. 

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் இரு கட்சியின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பரான் மாவட்டத்தில் இன்று (நவ.21) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். 

தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: “ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆளும் கட்சியினர் அதிகாரத்தை திருடர்கள் மற்றும் குண்டர்களிடம் ஒப்படைத்து விட்டனர். 

ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருப்பதால் ராஜஸ்தான் முழுவதும் சமூக விரோதிகள் அதிகரித்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றமிழைப்பவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். 

ஊழல் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகளாகும். ஆனால் காங்கிரஸ் கட்சியானது ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் சின்னமாகவே திகழ்ந்து வருகிறது.” என்று மோடி பேசினார். 

இதற்கு முன்பு 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 73 இடங்களில் மட்டும் வெற்றியடைந்த பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.