கரோனாவுக்குப் பின் குழந்தைகளிடையே அதிகரிக்கும் சுவாசநோய்கள்

கரோனா நோய்த் தொற்றுக்கு பிறகு மூன்றில் ஒரு குழந்தை சுவாசப் பிரச்னை சமந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுகின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கரோனாவுக்குப் பின் குழந்தைகளிடையே அதிகரிக்கும் சுவாசநோய்கள்

கரோனா நோய்த் தொற்றுக்கு பிறகு மூன்றில் ஒரு குழந்தை சுவாசப் பிரச்னை சமந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுகின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு பரவிய கரோனா நோய்த் தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் பலியானது அனைவரும் அறிந்ததே. அந்த வேளையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு.

ஆனால், கரோனா நோய்த் தொற்றின் மூன்றாம் அலைக்கு பிறகு குறிப்பாக 2022-ஆம் ஆண்டு தொடக்கம் முதலே சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும் நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

லோக்கல் சர்க்கில்ஸ் என்ற அமைப்பு, நாடு முழுவதும் 317 மாவட்டங்களில் உள்ள 31,000 பெற்றோர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த ஆய்வில், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு வகையான இன்ஃப்ளூயன்ஸா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் 30 சதவிகித குழந்தைகள் 4 முதல் 6 முறையும், 3 சதவிகித குழந்தைகள் 7 முதல் 12 முறையும், 38 சதவிகித குழந்தைகள் 2 முதல் 3 முறையும் காய்ச்சல், இருமல் அல்லது சளி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் 47 சதவிகிதம் குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டால் பள்ளிகளுக்கு செல்வதில்ல என்றும் 13 சதவிகிதம் பேர் பெரும்பாலும் பள்ளிகளுக்கு செல்வதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துள்ளதாக பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் குறித்து கூறும் மருத்துவர்கள், “நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. காய்ச்சல் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 5 முதல் 10 நாள்கள் நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது நீண்ட நாள்களுக்கு கொடுக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.

பொதுமுடக்க காலத்தில் ஆன்லைன் வகுப்புகளில்  மாணவர்கள் படித்ததால்  நோயெதிர்ப்பாற்றல் குறைந்து, தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு செல்வதால் பல்வேறு தொற்றுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com