தேசத்தை வடிவமைத்தவர் சர்தார் படேல்: பிரதமர் மோடி புகழாரம்

சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதையுடன்  புகழஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
தேசத்தை வடிவமைத்தவர் சர்தார் படேல்: பிரதமர் மோடி புகழாரம்
தேசத்தை வடிவமைத்தவர் சர்தார் படேல்: பிரதமர் மோடி புகழாரம்

சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதையுடன்  புகழஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.

சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து படேல் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர், சர்தார் வல்லபபாய் படேலின் தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசாட்சித் திறன் மற்றும் நமது தேசத்தின் தலைவிதியை அவர் வடிவமைத்த அதீத அர்ப்பணிப்பை நினைவுகூர்வதாகக் குறிப்பிட்டார்.

சர்தார் படேலின் ஜெயந்தி நாளில், அவரது திடமான ஆத்மா, தொலைநோக்கு அரசியல் மற்றும் அவர் நம் நாட்டின் தலைவிதியை வடிவமைத்த அசாதாரண அர்ப்பணிப்பு ஆகியவற்றை நாங்கள் நினைவுகூருகிறோம் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுகிறது. அவரது சேவைக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் என்றும் மோடி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com