
மும்பை: மும்பை புறநகரில் உள்ள குடியிருப்பில் பயிற்சி விமான பணிப்பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குப்பை சேகரிக்க வந்த குற்றவாளி, கத்தியுடனே வீட்டுக்குள் நுழைந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள விக்ரம் அத்வால் (35) ஞாயிற்றுக்கிழமை, 3வது மாடியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த பெண்ணின் வீட்டுக்குள் குப்பை சேகரிக்கச் சென்று, அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அதனை அவர் தடுத்த போது, அவரது கழுத்தை தான் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நிகழ்ச்சி நிரல் வெளியிட வேண்டும்: மோடிக்கு சோனியா கடிதம்
சத்தீஸ்கரைச் சேர்ந்த விமானப் பணிப்பெண், ஏர் இந்தியா நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்ட பிறகு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பைக்கு குடிபெயர்ந்தார்.
அந்தேரி பகுதியில் அந்தப் பெண் அவரது சகோதரி மற்றும் ஆண் நண்பர் உடன் வசித்து வந்த நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் விமானப் பணிப்பெண் கொலை தொடர்பாக, அப்பார்ட்மென்டில் துப்புரவாளராக பணிபுரியும் 35 வயது நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். முக்கிய குற்றவாளியான விக்ரம் அத்வால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஹவுசிங் சொசைட்டியில் உள்ள பாதுகாப்பு கேமராக்களில் தடயம் கிடைக்குமா என்று விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிக்க.. மும்பை விமானப் பணிப்பெண் கொலை; சிறையில் குற்றவாளி தற்கொலை
சொசைட்டியில் வீட்டு வேலை செய்யும் விக்ரம் அத்வாலின் மனைவியிடமும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் அத்வால், விமானப் பணிப்பெண்ணின் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். அப்போது அவர் தனது உடைக்குள் கத்தியை மறைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்பெண், குப்பையை எடுக்க வீட்டுக்குள் சென்றபோது, அத்வாலும் வீட்டுக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு பெண் எதிர்ப்புத் தெரிவித்தபோது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் இரண்டு முறைக் குத்தி கொலை செய்துவிட்டு, ரத்தக் கறை படிந்த ஆடைகளை கழிப்பறையில் சென்று சுத்தம் செய்து அணிந்துகொண்டுள்ளார்.
குடியிருப்பை விட்டு வெளியே வந்த அவர், பிறகு கீழே சென்று, வேறு ஆடை மாற்றிக் கொண்டு 2 மணிக்கெல்லாம் குடியிருடிப்பிலிருந்து வெளியேறியிருக்கிறார். அவர் வழக்கமாக குடியிருப்பிலிருந்து 4 மணிக்குத்தான் வெளியேற வேண்டும்.
சிசிடிவி கேமரா பதிவில் அத்வால், சீருடையுடன் குடியிருப்புக்குள் நுழைவதும், வேறு ஆடையில் வெளியேறுவதும் பதிவாகியிருக்கிறது. அவரது கழுத்து, கைகளில் காயங்கள் இருந்ததும், அவரைக் காட்டிக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்வால், பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தோடு குடியிருப்புக்குள் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார். இதில் மிகவும் அதிர்ச்சிதரும் தகவல் என்னவென்றால், பாலியல் பலாத்காரம் செய்யும் போது அப்பெண் கத்தியதோடு, கத்தியால் குத்துப்பட்ட அவரது அலறல் சப்தமோ அக்கம் பக்கத்தில் இருந்த யாருக்குமே கேட்கவில்லை என்பதுதான் என்கிறார்கள் காவல்துறையினர்.
கொலை நடந்த 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அந்தக் குடியிருப்பில் பல்வேறு பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 45 பணியாளர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி, சந்தேகத்தின் பேரில் அத்வால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொலை நடந்த அன்று, விமானப் பணிப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் பல முறை போன் செய்தும் அவர் எடுக்காத நிலையில், அவருடைய நண்பர்களின் உதவியை நாட, அவர்கள் வீட்டுக்கு சென்று கதவை தட்டியபோது, அது உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு கதவு உடைக்கப்பட்டது.
அதிகாரிகள் பிளாட்டுக்குள் சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...