ஹிமாசலில் பிரியங்கா காந்தி: வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு!

ஹிமாசலில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் பொதுக் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று காலை வந்தடைந்தார். 
ஹிமாசலில் பிரியங்கா காந்தி: வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு!

ஹிமாசலில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் பொதுக் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று காலை வந்தடைந்தார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மண்டி, குலு மாவட்டங்களுக்குச் சென்று நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிடுகிறார். மணாலியில் உள்ள ஆலு மைதானத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். 

கடந்த ஜூலை 14, 15 தேதிகளில் குலு மற்றும் மண்டி மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியது.

பிரியங்கா இன்று காலை குலுவில் உள்ள பூந்தர் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை மலர்க்கொத்து அளித்து வரவேற்றனர். மேலும் ஆப்பிள் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் பெட்டிகளின் விலைகள் குறித்து காங்கிரஸ் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகளுடன் பேசினார். 

அதானி குழுமம் கொள்முதல் விலையை வெளியிட்ட பிறகு, ஹிமாசலில் ஆப்பிள் பெட்டிகள் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு விற்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். 

பிரியங்காவுடன் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் விக்மாதித்ய சிங் ஆகியோர் உடனிருந்தனர். பிரியங்கா சிம்லா மற்றும் சோலன் மாவட்டங்களுக்கும் ஆய்வு செய்கிறார். 

ஜூன் 24-ல் தொடங்கிய பருவமழை செப்டம்பர் 11-ம் தேதி வரை ஹிமாச்சலில் ரூ.8,679 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

மாநிலத்தில் மொத்தம் 165 நிலச்சரிவுகள் மற்றும் 72 திடீர் வெள்ளப்பெருக்கும் பதிவாகியுள்ளன. ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சுகு வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com