அடுத்து என்ன? சுனிதா கேஜரிவாலுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆலோசனை

சுனிதா கேஜரிவால்(கோப்புப்படம்)
சுனிதா கேஜரிவால்(கோப்புப்படம்)ANI

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவியுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறை காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, திகார் சிறையில் கேஜரிவால் அடைக்கப்பட்டுள்ளார்.

பதவியில் இருக்கும் முதல்வர் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்றும், சிறையில் இருந்த படியே பணிகளை செய்வேன் என்றும் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ள நிலையில், பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுனிதா கேஜரிவால்(கோப்புப்படம்)
ஓவைசியை எதிர்த்து சானியா மிர்சாவை களமிறக்கும் காங்கிரஸ்?

மக்களை அரவிந்த் கேஜரிவால் அவமதிப்பதாகவும், தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கேஜரிவாலின் இல்லத்தில் அவரது மனைவி சுனிதாவுடன் அமைச்சர்களும், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

கேஜரிவால் ராஜிநாமா செய்து அவர் மனைவி சுனிதா முதல்வராக பதவியேற்பாரா? அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படுமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com