மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

போக்குவரத்துத் துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியத் தடை!

போக்குவரத்துத் துறை ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிய வேண்டாம்.

News image

Rajasthan

Updated On :2 ஏப்ரல் 2024, 12:44 pm

ராஜஸ்தானில் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிய வேண்டாம் எனப் போக்குவரத்துத் துணை ஆணையம் மணீஷ் அரோரா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தலைமைச் செயலர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது பல ஊழியர்கள் டி-சர்ட், ஜீன்ஸ் போன்ற கேஷுவல் உடைகள் அணிந்திருந்தனர். இதையடுத்து பணியின்போது கண்ணியமான ஆடைகள் அணியுமாறு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பணியின் போது ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் பிற அநாகரீகமான ஆடைகளை அணிந்து பணிக்கு வருவது அலுவலகத்தின் கண்ணியத்திற்கு எதிராக உள்ளது. எனவே, ஊழியர்கள் சாதாரண உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும்.

ஆண்கள் பேண்ட் - சட்டை, பெண்கள் சேலை அல்லது சல்வார் போன்ற உடையில் வரலாம். ஊழியர்கள் இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.