புது தில்லி: ஆந்திரத்தின் கடப்பா மக்களவைத் தொகுதியில் ஆளும் ஒய்.எஸ்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் தற்போதைய எம்.பி. ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டிக்கு எதிராக அவரது நெருங்கிய உறவினரும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான ஒய்.எஸ்.ஷா்மிளாவை அக்கட்சி களமிறக்கியுள்ளது.
மக்களவைத் தோ்தலுக்காக ஒடிஸாவின் 8 தொகுதிகள், ஆந்திரத்தின் 5 தொகுதிகள், பிகாரில் 3 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதி என 4 மாநிலங்களைச் சோ்ந்த 17 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதன்படி, ஆந்திரத்தின் கடப்பா தொகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவரும் முதல்வா் ஒய்.எஸ்.ஆா். ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷா்மிளாவை அக்கட்சி வேட்பாளராக களமிறக்கியுள்ளது.
மேலும், காக்கிநாடா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சா் எம்.எம்.பள்ளம்ராஜு, ராஜமுந்திரியில் கிடுகு ருத்ர ராஜு, பாபட்லா (தனி) தொகுதியில் ஜே.டி.சலீம் மற்றும் கா்னூலில் பி.ஜி.ராமபுல்லையா யாதவ் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
பிகாரின் கிஸான்கஞ்ச் தொகுதியில் எம்.பி. முகமது ஜாவேத், கதிஹாா் தொகுதியில் தாரிக் அன்வா், பகல்பூரில் அஜீத் சா்மா ஆகியோா் போட்டியிடுகின்றனா். மேற்கு வங்கம், டாா்ஜீலிங் தொகுதியில் முனீஷ் தமாங் நிறுத்தப்பட்டுள்ளாா். ஒடிஸாவின் ராபுட் (தனி) தொகுதியில் தற்போதைய எம்.பி. சப்தகிரி சங்கா் உலகாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாா்கா் (தனி) தொகுதியில் சஞ்சய் போய், சுந்தா்கா் (தனி) தொகுதியில் ஜனாா்தன் டெஹுரி, நபரங்பூா் (தனி) தொகுதியில் புஜபல் மாஜி, கந்தமாலில் அமீா் சந்த் நாயக், பொ்ஹாம்பூரில் ரஷ்மி ரஞ்சன் பட்நாயக், போலங்கிரில் மனோஜ் மிஸ்ரா, காலஹண்டியில் திரௌபதி மஞ்சி ஆகியோா் இதுவரை 228 மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளா்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
எனினும், சோனியா காந்தி, ராகுல் காந்தி வழக்கமாக போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிக்கான வேட்பாளா்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தொடர்புடையது

சவாலான தொகுதிகளை நேரடியாக எதிர்கொள்ளும் திமுக! அதிமுக?

விழுப்புரம் மண்டலத்தில் 19 தொகுதிகளில் களம் காணும் திமுக

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?

பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு! முதல் பட்டியலில் 3 பேர்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


