தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

ராஜஸ்தான்: தெருநாய் கடித்ததில் 4 வயது குழந்தை பலி

கோப்புப் படம்.

Published On :

ராஜஸ்தானில் தெருநாய் கடித்ததில் 4 வயது குழந்தை பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மசூதி அருகே ரேஷ்மா என்கிற 4 வயது குழந்தை தனது தந்தை வருகைக்காக இன்று காத்திருந்தது.

அப்போது தெரு நாய் கடித்ததில் ரேஷ்மா பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது. உடற்கூராய்வுக்கு பின் குழந்தையின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேஷ்மா குடும்பத்தினர், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதியை பார்வையிட வந்ததாக அம்பா மாதா காவல் நிலைய தலைமைக் காவலர் ரஞ்சித் சிங் தெரிவித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.