பாஜக சார்பில் போட்டியிடும் ராயல் சேலஞ்சர்ஸ்!

பாஜக சார்பில் போட்டியிடும் அரச குடும்ப வேட்பாளர்கள்
அம்ரிதா ராவ், யதுவீர் கிருஷ்ணதத்தா, மகிமா சிங், பிரநீத் கௌர், ஜோதிராதித்ய சிந்தியா, கிருத்தி சிங்
அம்ரிதா ராவ், யதுவீர் கிருஷ்ணதத்தா, மகிமா சிங், பிரநீத் கௌர், ஜோதிராதித்ய சிந்தியா, கிருத்தி சிங்

புது தில்லி: மக்களவைத் தேர்தலில் முன்னாள் அரச குடும்பங்களின் 10க்கும் மேற்பட்ட வம்சாவளியினரை பாஜக களமிறக்கியுள்ளது, அவர்களில் சிலர் அரசியலில் இப்போதுதான் முதல் முறையாக அறிமுகமாகிறார்கள்.

மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸின் மொஹுவா மொய்த்ராவை எதிர்த்து, கிருஷ்ணாநகர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ‘ராஜ்மாதா’ அம்ரிதா ராயை பாஜக தேர்வு செய்துள்ளது. பணப்பட்டுவாடா வழக்கில் மொய்த்ரா எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணச்சந்திர ராயின் நாடியா குடும்பத்தைச் சேர்ந்த அம்ரிதா ராய் தற்போது அரசியலில் நுழைந்துள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1757-இல் பிளாசி போரின்போது நவாப் சிராஜ்-உத் தௌலாவுக்கு உதவி, சநாதன தர்மத்தையும் வங்காள மொழியையும் காப்பாற்றி ராஜா கிருஷ்ணச்சந்திர ராய் பெருமை சேர்த்தவர்.

அம்ரிதா ராவ், யதுவீர் கிருஷ்ணதத்தா, மகிமா சிங், பிரநீத் கௌர், ஜோதிராதித்ய சிந்தியா, கிருத்தி சிங்
முக்கிய வேட்பாளர்கள் சந்திக்கும் பெயர்போன பிரச்னை!

ஒரு திரைப்பட நடிகராக இருந்தாலும் சரி, எளிய தொழிலாளியாக இருந்தாலும் சரி, முன்னாள் ராணியாக இருந்தாலும் சரி, ராஜாவாக இருந்தாலும் சரி, பாஜக அனைவருடனும் சமத்துவத்தைப் பேணுகிறது. மக்களவைத் தேர்தலுக்கு 'அரச குடும்பங்களைச்' சேர்ந்த பலரை வேட்பாளர்களாக ஆக்கியுள்ளோம்'' என, பா.ஜ.,வின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அரச குடும்பங்களைச் சேர்ந்த ராயல் வேட்பாளர்களில் ஐந்து பேர் தற்போதுதான் அரசியலில் நுழைகிறார்கள். இந்திய அரசியலில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நுழைவது என்பது இது முதல்முறையல்ல. எனினும், இவ்வாறு அரசு குடும்பத்திலிருந்து அரசியலில் நுழைய விரும்பியவர்களின் முதல் தேர்வாக பாஜக இருப்பது ஒன்றுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மைசூரு மக்களவைத் தொகுதியில் தற்போதைய எம்பி பிரதாப் சிம்ஹாவுக்குப் பதிலாக யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ வாடியாரை பாஜக நிறுத்தியுள்ளது. இந்த தொகுதி எம்.பி. சிம்ஹா கொடுத்த வருகையாளர் சீட்டைக் கொண்டுதான், கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்துக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து புகைக் குப்பிகளை வீசி பெரும் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

1984, 1989, 1996 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் மைசூருவில் இருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடியாரின் தாய்வழி மாமா ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜா வாடியார் - வாரிசு இல்லாமல் 2013 இல் இறந்தார். பின்னர் யதுவீர் தத்தெடுக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு பழைய மைசூரு சிம்மாசனத்தின் ராஜாவாக அறிவிக்கப்பட்டார்.

கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில், தற்போதைய எம்பி ரேவதி வர்மாவுக்குப் பதிலாக, திரிபுராவின் மாணிக்ய வம்சத்தைச் சேர்ந்த மகாராணி கிருத்தி சிங் டெப்பர்மாவை பாஜக நிறுத்தியுள்ளது.

அம்ரிதா ராவ், யதுவீர் கிருஷ்ணதத்தா, மகிமா சிங், பிரநீத் கௌர், ஜோதிராதித்ய சிந்தியா, கிருத்தி சிங்
போலி குறுந்தகவல்களை அடையாளம் காண்பது எப்படி? உதவுகிறது காவல்துறை

ஒடிசாவில், முந்தைய காலாஹண்டி சமஸ்தானத்தைச் சேர்ந்த மாளவிகா கேசரி தியோ மற்றும் பட்நாகர்-போலங்கிர் சமஸ்தானத்தைச் சேர்ந்த சங்கீதா குமாரி சிங் தியோ ஆகியோரை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

மேவார் அரச குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட மகிமா சிங்கையும் பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர் ராஜஸ்தானில் உள்ள ராஜ்சமந்த் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். பாலைவன மாநிலத்தில், முன்னாள் ராஜஸ்தான் முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங்கும், குவாலியரின் முன்னாள் சிந்தியா அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான துஷ்யந்த் சிங்கையும் பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. துஷ்யந்த் ஜலவர்-பரான் தொகுதியில் போட்டியிடுகிறார், அங்கிருந்து அவர் நான்கு முறை பாஜக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இப்போது பாட்டியாலா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரனீத் கவுரும் பாட்டியாலா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணா தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, குவாலியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர். குவாலியரின் ‘மகாராஜா’ (ராஜா) என்று அழைக்கப்படும் இவர், பாஜக சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் சேர்ந்த இவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

பாட்டியாலாவில் பாஜகவின் வேட்பாளராக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் உள்ளார், இவர் பாட்டியாலாவின் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இது போல பல முந்தைய அரச குடும்பங்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புள்ள பலரை பாஜக வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

அரச குடும்பங்களின் முதல் தேர்வு

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஈடுபடுவது இந்திய அரசியலில் புதிதல்ல. ஆனால் இந்த முறை கவனத்தை ஈர்க்கும் விஷயம் என்னவென்றால், அவர்களில் பெரும்பான்மையினருக்கு பாஜக முதல் தேர்வாக உருவெடுத்துள்ளது என்று பாஜகவினர் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com