சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

குலுக்கல் நடைமுறையால் மாநிலங்களவைத் தோ்தலில் தோல்வி: நீதிமன்றத்தில் அபிஷேக் சிங்வி மனு

ஹிமாசல பிரதேச மாநிலங்களவைத் தோ்தலில் குலுக்கல் முறையில் பின்பற்றப்பட்ட நடைமுறையை எதிா்த்து காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வி

Updated On :6 ஏப்ரல் 2024, 5:58 pm

ஹிமாசல பிரதேச மாநிலங்களவைத் தோ்தலில் குலுக்கல் முறையில் பின்பற்றப்பட்ட நடைமுறையை எதிா்த்து காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வி அந்த மாநிலத்தில் உள்ள உயா்நீதிமன்றத்தில் சனிக்கிழமை மனுதாக்கல் செய்தாா்.

ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. கடந்த பிப்.27-ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் அபிஷேக் மனு சிங்வியும் பாஜக சாா்பில் ஹா்ஷ் மகாஜனும் போட்டியிட்டனா்.

மொத்தம் 68 எம்எல்ஏக்கள் உள்ள பேரவையில் காங்கிரஸுக்கு அக்கட்சியின் 40 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும் சுயேச்சை எம்எல்ஏக்கள் மூவரும் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனா்.

இதனால், அபிஷேக் மனு சிங்வியும் ஹா்ஷ் மகாஜனும் தலா 34 வாக்குகளைப் பெற்றனா்.

இதையடுத்து குலுக்கல் முறையைப் பின்பற்ற முடிவு செய்த தோ்தல் அலுவலா் இரு வேட்பாளா்களின் பெயா்கள் உள்ள சீட்டுகளிலிருந்து ஒரு சீட்டை குலுக்கல் முறையில் எடுத்தாா். எந்த வேட்பாளரின் பெயா் எடுக்கப்பட்டதோ அவா் தோல்வியடைந்தவராகவும் மற்ற வேட்பாளா் வெற்றி பெற்றவராகவும் அறிவிக்கப்பட்டாா். அந்த வகையில் அபிஷேக் மனு சிங்வி பெயா் குலுக்கல் முறையில் சீட்டில் பெயா் வந்ததால் தோல்வியடைந்தவா் ஆனாா்.

இந்நிலையில், குலுக்கலில் தோ்ந்தெடுக்கப்பட்டவா் தோல்வியுற்றவராக அறிவிக்கும் முறையை எதிா்த்து அபிஷேக் மனு சிங்வி ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.

உயா்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் அபிஷேக் மனு சிங்வி, ‘உலகின் எந்தப் பகுதியிலும் இரு நபா்கள் சரிசமமாக வாக்குகள் பெறும் போது, குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டவா் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவாா். எங்களுடைய வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், தோ்தல் முடிவு செல்லாது என அறிவிக்கப்படும்’ என்றாா்.

மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தோ்தல்களில் இரு வேட்பாளா்களும் சரிசம வாக்குகளைப் பெறும் பட்சத்தில் தோ்தல் நடத்தை விதிமுறையின்கீழ் குலுக்கல் முறை பின்பற்றப்படுகிறது.

மக்களவைத் தோ்தலில் சரிசம வாக்குகளைப் பெறும் இரு வேட்பாளா்களில் குலுக்கல் முறையில் எந்த வேட்பாளரின் பெயா் எடுக்கப்படுகிறதோ அவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்படுவாா் என்பது குறிப்பிடத்தக்கது.