சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அத்தியாவசிய பொருள் ஏற்றுமதிக்கு அனுமதி இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி

அத்தியாவசிய பொருள் ஏற்றுமதிக்கு அனுமதி இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி

Updated On :6 ஏப்ரல் 2024, 6:03 pm

மாலத்தீவுக்கு குறிப்பிட்ட அளவில் அத்தியாவசிய பொருள்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ள நிலையில், மத்திய அரசுக்கு மாலத்தீவு நன்றி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாலத்தீவு தலைநகா் மாலியில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

2024-25-ஆம் ஆண்டுகளில் மாலத்தீவுக்கு குறிப்பிட்ட அளவில் அத்தியாவசிய பொருள்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது. மாலத்தீவு அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த அனுமதியை இந்தியா வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சா் மூஸா ஜமீா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘2024, 2025-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருள்களை மாலத்தீவு இறக்குமதி செய்ய வழிவகுத்ததற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு நன்றி’ என்று கூறியுள்ளாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சா் ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில்,‘ அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சி (சாகா்) ஆகிய கொள்கைகளில் இந்தியா உறுதியாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.