'எங்கள் கட்சியில் முதலாளியோ வேலைக்காரனோ இல்லை': மகாராஷ்டிர முதல்வர்

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

எங்கள் கட்சியில் முதலாளியோ அல்லது வேலைக்காரனோ இல்லை என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13 மற்றும் மே 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் மகாராஷ்டிரம் என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இங்கு பாஜக, ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் மற்றொரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவின் வாரிசு அரசியலை விமர்சித்துள்ளார். "நான் முதல்வர், ஆனால் இப்போதும் ஒரு தொண்டனாகவே பணிபுரிகிறேன். எங்கள் கட்சியில் முதலாளியோ அல்லது வேலைக்காரனோ இல்லை. நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்போம்.

எங்கள் கட்சியில் ராஜாவின் மகன் ராஜாவாக மாட்டான். வேலை செய்பவன்தான் ராஜாவாவான். பாலாசாகேப் தாக்கரே தனது சக ஊழியர்களை நண்பர்களாகக் கருதினார், ஆனால் அவர்(உத்தவ்) எங்களை வீட்டு வேலைக்காரர்களாகக் கருதினார். ஒரு கட்சியையோ அல்லது அரசையோ வீட்டில் அமர்ந்து நடத்த முடியாது. வரும் மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றிபெறப் போகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com