திகார் சிறையில் கேஜரிவால் எடை குறைந்ததா?

அரவிந்த் கேஜரிவால் எடை குறித்து பாஜக, ஆம் ஆத்மி இடையே கருத்து வாதம் நடைபெற்று வருகிறது.
திகார் சிறையில் கேஜரிவால் எடை குறைந்ததா?

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எடை குறித்து பாஜக, ஆம் ஆத்மி இடையே கருத்து வாதம் நடைபெற்று வருகிறது.

கேஜரிவால் கைது செய்யப்பட்டது முதலே திகார் சிறையில் அவரின் எடை குறைந்து வருவதாக தில்லி அமைச்சர் அதிஷி தெரிவித்திருந்தார். சிறையில் அவரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், பாஜகவினர் அவரை சிறையிலேயே வைத்திருக்க திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுப்பதாகவும் விமர்சித்திருந்தார்.

இதனிடையே திகார் சிறையில் அரவிந்த் கேஜரிவாலின் உடல் எடை ஒரு கிலோ அதிகரித்துள்ளதாக பாஜகவைச் சேர்ந்தவரும் தில்லி எதிர்க்கட்சி தலைவருமான ராம்வீர் சிங் பிதூரி தெரிவித்துள்ளார். மேலும், அவர் சிறையில் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இது தொடர்பாக பேசிய ராம்வீர் சிங் பிதூரி, அரவிந்த் கேஜரிவாலின் உடல் எடை 4.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி கூறுகிறது. ஆனால், அவரின் எடை ஒரு கிலோ அதிகரித்துள்ளது. சாதாரண நபராக இருந்தாலும், விஐபியாக இருந்தாலும் சிறையில் அனைவருக்கும் ஒரே விதிகள்தான் பின்பற்றப்படுகின்றன. கேஜரிவால் நேற்று இரவு கூட அவரின் மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் வழக்குரைஞர் பி.ஏ. விபாவை சந்தித்து அரை மணிநேரத்துக்குப் பேசினார். வாரத்திற்கு 5 முறை வழக்குரைஞர்களை சந்திக்க கேஜரிவால் கோரினார். ஆனால் சிறையில் இருமுறை சந்திக்க மட்டுமே விதிகளில் அனுமதி உண்டு எனக் கூறினார்.

திகார் சிறையில் கேஜரிவால் எடை குறைந்ததா?
பாஜகவினரின் 'ஐக்யூ'வை சோதிக்கவே மீன் சாப்பிட்ட விடியோ: தேஜஸ்வி யாதவ்

இதனிடையே திகார் சிறையிலிருந்து அரவிந்த் கேஜரிவாலின் உடல் நிலை குறித்த தரவு வெளியாகியுள்ளது. அதில் கேஜரிவாலின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கூட குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், கேஜரிவாலின் உடல் எடை 65 கிலோவாக இருப்பதும், உடல் எடை குறையவில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவும் சராசரியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com