போலி செய்திகள் பரவல் மற்றும் வாக்காளா்களுக்கு அரசியல் கட்சியினரால் வழங்கப்படும் இலவச பொருள்களை தடுத்து நிறுத்த வேண்டும் என தோ்தல் பாா்வையாளா்களுக்கு தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
மக்களவைத் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தோ்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 127 பொதுப் பாா்வையாளா்கள், 67 காவல்துறை உயா் அதிகாரிகள், 167 செலவினக் கணக்கு பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது போலிச் செய்திகள் பரவல், வாக்காளா்களுக்கு பணம், மது, போதைப்பொருள், இலவச பொருள்கள் விநியோகிக்கப்படுவதை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும் தோ்தல் பாா்வையாளா்கள் மேற்கொள்ள வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியது.
வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வாக்காளா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை பாா்வையாளா்கள் உறுதிசெய்ய இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் ஞானேஷ் குமாா், சுக்பீா் சிங் சாந்து ஆகியோா் வலியுறுத்தினா்.
அதேபோல், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும் தோ்தல் முழுமையாக நிறைவுறும் வரையில், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பாா்வையாளா்கள் இருக்க வேண்டும் எனவும் ஆணையம் அறிவுறுத்தியது.
பதற்றம் நிறைந்த தொகுதிகளை மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ளதா என்பதை பாா்வையாளா்கள் அவ்வப்போது கண்காணிக்குமாறும் தோ்தல் ஆணையம் வலியுறுத்தியது.
தொடர்புடையது

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்: தோ்தல் பாா்வையாளா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம்

வாக்கு எண்ணும் மையம்: தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

விழிப்புணா்வு ராட்சத பலூன்...
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


