வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

’ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை’ அமல்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலுக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 14) வெளியிடப்பட்டுள்ளது.

புதுதில்லியில் அக்கட்சித் தலைமையகத்தில் பாஜகவின் தோ்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்நிகழ்வில் பிரதமா் மோடி உள்பட பாஜகவின் மூத்த தலைவா்கள் பலர் கலந்துகொண்டுள்ளனா்.

முன்னதாக, கட்சித் தலைமையகத்தில் டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, ‘பிரதமர் மோடியின் கேரண்டி 2024’ என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்:

 1. ’ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை’ அமல்படுத்தப்படும்,

 2. 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு,

 3. பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,

 4. உலகம் முழுவதும் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல திட்டம்,

 5. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்,

 6. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும்,

 7. சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும்,

 8. பொது வாக்காளர் பட்டியல் முறை அமல்படுத்தப்படும்,

 9. 2025-ஆம் ஆண்டு ’பழங்குடியினரின் பெருமை ஆண்டாகக்’ கடைபிடிக்கப்படும்,

 10. பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளைஞர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும்,

 11. வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,

 12. அடுத்த 5 ஆண்டுகளில் கிராமங்களில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,

 13. 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை,

 14. ஸ்டார்ட் அப்கள் ஊக்குவிக்கப்படும்,

 15. திருநங்கைகளுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டம்,

 16. வந்தே பாரத், புல்லட் ரயில் சேவைகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவிபடுத்தப்படும்,

 17. 2047க்குள் ஆற்றல் துறையில் தன்னிறைவடைந்த நாடாக இந்தியா மாற நடவடிக்கை,

 18. ஏழைகளுக்கு இலவச மின்சாரம்,

 19. உற்பத்தி துறையில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற நடவடிக்கை, அதன்மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்,

 20. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்,

 21. ஆட்டோ, வாடகை கார், லாரி உள்பட அனைத்துவித ஓட்டுநர்களையும் உள்ளடக்கிய காப்பீட்டு திட்டம்,

 22. ஜிஎஸ்டி வரி தாக்கல் எளிமையாக்கப்படும்,

 23. சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கு அரசு நிர்வாகத்தில் முன்னுரிமை,

 24. தபால் நிலையம் மற்றும் டிஜிட்டல் இந்தியா வலைதளம் மூலம் ஒருங்கிணைந்த காப்பீடு சேவை வழங்க நடவடிக்கை,

 25. உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையங்கள் திறக்க நடவடிக்கை, அதன்மூலம், இந்தியாவின் கலாசார பெருமையை பரப்புதல்,

 26. வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட தொடர் நடவடிக்கை,

 27. ஏழைகளுக்கான பிரதமரின் வீடு கட்டித் தரும் திட்டம் மேலும் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்துள்ளன.

Attachment
PDF
BJPSankalpPatra2024.pdf
Preview

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com