தேர்தல் பணியில் ஒப்பந்தப் பணியாளர்கள்? மார்க்சிஸ்ட் புகார்

மேற்கு வங்கத்தில் ஒப்பந்தப் பணியாளர்களும், ஆளுங்கட்சியின் விளம்பரங்களை தயாரிக்கும் நிறுவன ஊழியர்களும் தேர்தல் பயிற்சியில் பங்கேற்றதாக புகார்
தேர்தல் பணியில் ஒப்பந்தப் பணியாளர்கள்? மார்க்சிஸ்ட் புகார்

மக்களவைத் தேர்தல் தொடர்பான பயிற்சியில் அரசு ஒப்பந்தப் பணியாளர்களும் கலந்து கொண்டதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளனர்.

மேற்கு வங்க தலைமை தேர்தல் அலுவலர் ஆரிஷ் அஃப்தாபை சந்தித்த 4 பேர் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுவினர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ராபின் டெப் கூறுகையில், ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு விளம்பரம் தயாரிக்கும் கார்பரேட் நிறுவனத்தின் ஊழியர்களும் தேர்தல் பயிற்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், தேர்தல் பணிகளில் எக்காரணத்தை கொண்டும் ஒப்பந்தப் பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருப்பதை சுட்டிக் காட்டினார்.

அதேபோல், கிழக்கு மிட்னாபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு சொந்தமான வாகனங்களில் ஆளுங்கட்சியின் பேனர்கள் ஒட்டப்பட்ட நிகழ்வையும் புகாராக தெரிவித்தனர்.

மேலும், வணிகத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் சுவரொட்டிகள், பேனர்கள் ஒட்டப்பட்டிருப்பதால், அதனை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் தேர்தல் செலவில் சேர்க்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com