வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

வந்தே பாரத் ரயில் லாப விவரங்கள் அற்றுப்போன மர்மம்!
வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

வந்தே பாரத் ரயில்கள் மூலமாக எவ்வளவு வருவாய் ஈட்டப்படுகிறது என்பதற்கான விவரங்கள் பராமரிக்கப்படுதில்லை என ரயில்வே அமைச்சகம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் ஆர்டிஐ மூலம் வந்தே பாரத் ரயில்கள் ஈட்டும் வருவாய் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில்கள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் எவ்வளவு? இந்த ரயில்களின் செயல்பாடுகளின் வழியாக லாபம் அல்லது நட்டம் எது கிடைக்கிறதா? என கேள்விகள் கேட்டுள்ளார்.

இதற்கு, “ரயில்கள் வாரியாக லாபம் கணக்கிடப்படுவதில்லை” என ரயில்வே அமைச்சகம் பதிலளித்துள்ளது.

பிப்.15, 2019 அன்று தில்லி முதல் வாரணசி வரை அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில், இன்றைக்கு 102 ரயில்கள் ஆக மாறியுள்ளது. 100 பயணத்தடங்களில் இந்த ரயில்கள் இயங்குகின்றன.

இவற்றில் எத்தனை மக்கள் பயணிக்கிறார்கள், எவ்வளவு தொலைவு ரயில் பயணிக்கிறது என்கிற விவரங்களையெல்லாம் பராமரிக்கும் ரயில்வே, முக்கிய தகவலான ரயில்கள் மூலமாக ஈட்டப்படும் வருவாயைக் கணக்கிடுவதில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது என கவுர் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!
‘வந்தே பாரத்’ ரயில்களில் 2 கோடி போ் பயணம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com