25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி
வேலூரில் பிரதமர் மோடி உரை
வேலூரில் பிரதமர் மோடி உரைDOTCOM

நாட்டில் சுமார் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

பிகார் மாநிலம் கயாவில் இன்று பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால், ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், நாட்டின் பிரதமராகியிருக்க முடியாது. மக்களின் ஆசியே எனக்கு இந்தப் பதவியை வழங்கியுள்ளது. இந்தியா வளமானதாக மாற வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரின் கனவு என்றார்.

வேலூரில் பிரதமர் மோடி உரை
தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழிசை: அது என்ன 'அக்கா 1825'?

பல ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் நேரத்தை வீணடித்தது. பிகாரை ஆண்ட ராஷ்ட்ரிய ஜனதா ஆட்சியில், ஊழல் செய்வதே ஒரு தொழில்போல எங்கும் பரவியிருந்தது. அந்த அரசு பிகாருக்குக் கொடுத்தது இரண்டுதான் ஒன்று காட்டாட்சி, மற்றொன்று ஊழல்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது. அது பற்றி பெரியளவில் யாரும் பேசப்படவும் இல்லை, விவாதிக்கப்படவும் இல்லை. நான் நாட்டில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் என்றார்.

சமூக நீதி என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அரசியல் செய்தன. இந்த தேர்தல், பரந்த பாரதம், பரந்த பிகாருக்காக நடத்தப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com