தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தனக்கு சிறையில் இன்சுலின் வழங்குவதில்லை என கடந்த வெள்ளியன்று(ஏப். 19) பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதன் காரணமாக தனக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவித்திருந்தார்.
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு திகாா் சிறை நிா்வாகம் இன்சுலின் வழங்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.
டைப் -2 நீரிழிவு நோயாளியான கேஜரிவாலின் சர்க்கரை அளவு 320-ஆக அதிகரித்த பிறகுதான் இன்சுலின் அளிக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
நேற்றிரவு 2 யூனிட்டுகள் இன்சுலின் ஊசி மூலம் கேஜரிவாலுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டதை திகார் சிறை நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.