'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

வாக்காளர்களுக்கு பெங்களூரு உணவகங்களின் சிறப்பு சலுகைகள்!
'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!
ANI

கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளையும் இலவசங்களையும் அறிவித்துள்ளன, பெங்களூரு நிறுவனங்கள்.

ஏறத்தாழ 1 கோடி பேர் பெங்களூருவில் வாக்களிக்க தகுதியுடையவர்கள். அவர்கள் வாக்களித்த மை விரலோடு இந்த உணவகங்களுக்கு வருகை தந்து விலை சலுகைகளைப் பெறலாம்.

நிசர்கா கிராண்ட் ஹோட்டல், இலவச பட்டர் தோசை, நெய் சோறு மற்றும் குளிர்பானங்களை வாக்குப் பதிவு நாளில் வழங்கவுள்ளது.

பெல்லந்தூரில் உள்ள டெக் ஆப் ப்ரூஸ் மதுபான விடுதி ஒரு குவளை பீர் ஏப்ரல் 27 மற்றும் 28-ம் தேதிகளில் இலவசமாக வழங்கவுள்ளது.

பல்வேறு இடங்களில் மதுபான விடுதியைக் கொண்டுள்ள சொசியல் நிறுவனம், வாடிக்கையாளர்கள் வாக்களித்த மை விரலைக் காண்பித்தால் 20 சதவிகிதம் தள்ளுபடி அளிப்பதாக அறிவித்துள்ளது.

ஆட்டோ பதிவு செய்யும் செயலியான ரேபிடோ முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்கச் செல்ல இலவச சேவையை வழங்கவுள்ளது.

மெட்ரோ சேவை நேரம் நீட்டிப்பு

பெங்களூரு மெட்ரோ மற்றும் நம்ம மெட்ரோ ரயில் சேவைகளின் நேரம் தேர்தல் நாளன்று அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

நாகசந்திரா, சல்லகட்டா, சில்க் இன்ஸ்டிடியூட், வைட்ஃபீல்ட் முனையங்களுக்கு செல்லும் கடைசி ரயில் சேவை இரவு 11.55 மணிக்குப் புறப்படும். மெஜஸ்டிக் இண்டர்சேஞ்சில் இருந்து நான்கு திசைகளுக்கும் புறப்படும் கடைசி ரயில்களின் நேரம் நள்ளிரவு 12.35 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com