எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று(ஏப். 26) காலை பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 8:44 am IST

கா்நாடகத்தில் முதல்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 26) வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்தலில் 247 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்; 2.88 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா்.

கா்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

முதல்கட்டத் தோ்தலில் உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுா்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ் நகா், பெங்களூரு ஊரகம், பெங்களூரு வடக்கு, மத்திய பெங்களூரு, பெங்களூரு தெற்கு, சிக்பளாப்பூா், கோலாா் ஆகிய 14 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று(ஏப். 26) காலை பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வாக்களித்தப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ஒருவர் நம்பும் வேட்பாளரை தேர்வு செய்வது மிக முக்கியம் என்று தெரிவித்தார்.

"நாடாளுமன்றத்தில் எனது குரலாக யார் குரல் கொடுப்பார்கள் என்று எனது வாக்கானது என்னுடைய உரிமையை நிலை நாட்டுகிறது.

நீங்கள் நம்பும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம், கடந்த 10 ஆண்டுகளில் நான் கண்ட வெறுப்பு மற்றும் பிளவுபடுத்தும் அரசியல் மாற்றத்திற்காக நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன்." என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.