காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 12:10 pm IST

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் காலை 11 மணி நிலவரப்படி 28.15 சதவீத வாக்குப்பதிவு பதிவானது.

மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக மாநில தேர்தல் ஆணையர் அனுபம் ராஜன் தெரிவித்தார்.

காலை 11 மணி நிலவரப்படி தமோஹ் 26.84 சதவீதமும், ஹோஷாங்காபாத் 32.40, கஜுராஹோ 28.14, ரேவா 24.46, சத்னா 30.32 மற்றும் திகம்கர் 26.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

2019இல் தாமோஹ் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் பிரஹலாத் படேலும், திகம்கர் தொகுதியில் மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் மற்றும் அவரது மனைவியும் களத்தில் இருந்தனர். இந்தநிலையில், குமார் திகம்கர் தொகுதியை மூன்று முறை பிரதிநிதித்துவப்படுத்தி நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.

6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இதில் 58,32,333 ஆண்கள், 53,29,972 பெண்கள் மற்றும் 155 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 12,828 வாக்குச் சாவடிகள், 1,136 பெண்களால் நடத்தப்படும், 1,1162,460 தகுதியான வாக்காளர்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 19 வேட்பாளர்கள் சத்னாவில் களத்தில் உள்ளனர், குறைந்த வேட்பாளர்கள் திகம்கரில் ஏழு பேர் போட்டியிடுகின்றனர். மாநிலத்தில் உள்ள 47 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 6 தொகுதிகளில் 2,865 முக்கிய வாக்குச் சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தண்ணீர், மருந்துகள், தங்குமிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் தொடர்ந்து நான்காவது முறையாக திகம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் பங்கஜ் அஹிர்வாரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.