

மகாராஷ்டிர மாநிலத்தில் நாந்தேட் மாவட்டத்தில் 26 வயதான இளைஞர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (இவிஎம்) இரும்புக் கம்பி கொண்டு தாக்கியுள்ளார்.
ராம்புரி தொகுதியில் வாக்களிக்க வந்த இளைஞர் இவிஎம் இயந்திரத்தை இரும்புக் கம்பி கொண்டு தாக்கியுள்ளார்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் சேதமடைந்த இவிஎம் இயந்திரம் மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவான அரசு அமைய வேண்டும் என இளைஞர் தெரிவித்ததாக காவல் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
எதனால் இளைஞர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பையாசாகேப் எட்கே என்கிற அந்த இளைஜர் சட்டம் மற்றும் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர் எனவும் 10 மாதங்களாக புனேவில் இருந்தவர் தற்போது கிராமத்துக்குத் திரும்பியதாகவும் ஏதேனும் கட்சியைச் சேர்ந்தவரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.