மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நாட்டில் வேலையின்மை விகிதம் மிக அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் உள்ள உத்கிர் என்ற இடத்தில் இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசில் கடந்த 10 ஆண்டுகளில் நிரப்பப்படாமல் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் மக்களின் கஷ்டங்களும் வேலையின்மையும் அதிகரித்துள்ளது.

70 கோடி மக்கள், இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அனைத்து விவசாய உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) விதிக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அவை ரத்து செய்யப்படும். மகாராஷ்டிரத்தில் ஜனநாயகம் பலவீனமடைந்து வருகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாங்கப்பட்டனர்,

அரசுகள் கவிழ்க்கப்பட்டன, கட்சிகள் உடைக்கப்பட்டன. ஜனநாயகத்திற்கு என்ன நடக்கிறது என்பதைவிட பெரிய குற்றம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். லத்தூர் (தனி) மக்களவைத் தொகுதியில் பாஜக எம்பி சுதாகர் ஷ்ரங்கரேவுக்கு எதிராக கண் அறுவை சிகிச்சை நிபுணர் சிவாஜி கல்கேவை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com