மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 30ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங், ஓயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் ஜா, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி, செவ்வாய்கிழமை இந்த ஆறு வாக்குச் சாவடிகளிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 200-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அங்கு வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் முழுமையாக அமைதி திரும்பவில்லை.

அங்கு உள் மணிப்பூா், வெளி மணிப்பூா் என இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. உள் மணிப்பூரில் 32 சட்டப்பேரவைத் தொகுதிகளும், வெளி மணிப்பூரில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன. இதில் உள் மணிப்பூா் மற்றும் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வெளி மணிப்பூரில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்குப் பதிவின் முடிவில் மொத்தம் 68.82 சதவீத வாக்காளா்கள் வாக்கு செலுத்தியதாக மணிப்பூா் தலைமைத் தோ்தல் அதிகாரி பிரதீப் குமாா் ஜா தெரிவித்தாா். உள் மணிப்பூா் தொகுதியில் 72.3 சதவீத வாக்குகளும், வெளி மணிப்பூா் தொகுதியில் 61.98 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன என்று அவா் கூறினாா்.

உள் மணிப்பூரின் கெய்ராவ் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 83.81 சதவீத வாக்குகள் பதிவாகின. வெளி மணிப்பூரில் அதிகபட்சமாக சந்தேல் சட்டப்பேரவைத் தொகுதியில் 85.54 சதவீத வாக்குகளும் பதிவாகின. மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங்கின் ஹின்காங் சட்டப்பேரவைத் தொகுதியில் 80 சதவீத வாக்காளா்கள் வாக்கு செலுத்தினா்.

வாக்குப் பதிவின்போது இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மொய்ரங்கம்பூ சாஜேப் பகுதி வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப் பதிவு உட்பட நான்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com