ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

புதுதில்லி: என்.சி.இ.ஆர்.டி. பாட புத்தகங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்து, புதுப்பிக்கும்படி கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுவரையில் என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களை புதுப்பிப்பதற்கான எந்த வித உத்தரவும் இல்லை. இருப்பினும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் 2017 முதல் அவ்வப்போது பாட புத்தகங்களை திருத்தி புதுப்பித்து வருகிறது.

வேகமாக மாறிவரும் இன்றைய உலகில், பாடப்புத்தகங்கள் முற்றிலும் புதுப்பிக்கப்படுவது முக்கியம். புதிய கல்வி அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக வருடாந்திர அடிப்படையில் மதிப்பாய்வு செய்து அவற்றைப் புதுப்பிக்குமாறு என்.சி.இ.ஆர்.டி. கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதே வேளையில், ஒருமுறை வெளியிடப்பட்ட என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்கள் பல ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கக்கூடாது என பரிந்துரைக்கப்பட்டது. புத்தகங்கள் அச்சிடுவதற்கு முன்பு அவை ஒவ்வொரு ஆண்டும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பின் அல்லது சில புதிய விவரங்கள் சேர்க்கப்பட வேண்டியிருப்பின், அவை புத்தகங்களில் சேர்க்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் கீழ் படி பாடப்புத்தகங்களை உருவாக்கும் பணியில் என்.சி.இ.ஆர்.டி. ஈடுபட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டத்தின்படி பாடப்புத்தகங்கள் தயாராகிவிடும்.

இந்த ஆண்டு 3 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி. அறிமுகப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com