7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட, 7 நக்சலைட்டுகள் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லையின் வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது கடந்த 15 நாள்களில் நக்சலைட்டுகள் மீது பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய தாக்குதலாகும்.

மாவட்ட பாதுகாப்புப் படை (ரிசர்வ்) மற்றும் சிறப்புக் காவல் படை இணைந்து நக்சல்களின் சக்தி வாய்ந்த பகுதியான டெக்மேட்டா மற்றும் காகூர் கிராமங்களுக்கு நடுவே உள்ள அபுஜ்மத் பகுதியில் இன்று காலை 6 மணியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

கோப்புப் படம்
பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்தத் துப்பாக்கி் சூட்டை நடத்தியதாகவும், தாக்குதல் முடிந்த பின் 2 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகளின் உடல்களை மீட்டதுடன், ஏகே - 47 துப்பாக்கியும், மற்ற ஆயுதங்களுடன் வெடி பொருட்களையும் கைபற்றியுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் அடையாளம் தெரியவில்லை என்றும், நக்சல் தேடுதல் வேட்டை இன்னும் தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாரயண்பூர் மற்றும் கான்கேர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பகுதியில், பாதுகாப்பு படையினர் தனித்தனியே நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 88 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com