கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

மால்சிரஸ் (மகாராஷ்டிரம்): "நாட்டில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில்கூட காங்கிரஸ் போட்டியிடவில்லை; அக்கட்சிக்கு வாக்களித்து, மக்கள் தங்களது வாக்குகளை வீணாக்க வேண்டாம்' என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, மகாராஷ்டிர மாநிலம், சோலாபூரில் உள்ள மால்சிரஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:

நாட்டை 60 ஆண்டுகள் ஆளும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. இந்த காலகட்டத்தில் உலகின் மற்ற நாடுகள் வேகமாக முன்னேறிய நிலையில், நமது நாட்டில் விளைநிலங்களுக்கு தண்ணீரைக்கூட காங்கிரஸால் கொண்டுவர முடியவில்லை.

கடந்த 2014 வரையில் சுமார் 100 நீர்ப்பாசனத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. நான் பிரதமரான பிறகு, இத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி முடிக்க தீவிரமாக பணியாற்றி

னேன். தற்போது 66 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அனைத்து வீடுகள் மற்றும் விளைநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதே எனது வாழ்நாள் லட்சியம்.

சரத் பவார் மீது விமர்சனம்: "இந்தியா' கூட்டணிக் கட்சிகள், இப்போது விவசாயிகள் குறித்து பெரிதாக பேசுகின்றன. ஆனால், 2014}ஆம் ஆண்டுக்கு முன்பு அவர்களின் ஆட்சியில் விவசாயிகளின் நிலை மிக மோசமாக இருந்தது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் (தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரை குறிப்பிடுகிறார்), "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்ட முந்தைய மத்திய அரசில் வேளாண் அமைச்சராக பதவி வகித்தார். அவரது காலத்தில் கரும்புக்கான நியாய விலை குவிண்டாலுக்கு ரூ.200}ஆக இருந்தது. மோடியின் ஆட்சியில் இது ரூ.340}ஆக உள்ளது.

பவாரின் காலகட்டத்தில் கரும்பு நிலுவைத் தொகையை பெற விவசாயிகள் அல்லாடும் நிலை காணப்பட்டது. கடந்த 2014}ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்ட நிலுவைத் தொகை ரூ.57,000 கோடி. அதேநேரம், நடப்பாண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலுவைத் தொகை ரூ.1,14,000 கோடி.

முந்தைய ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடி மதிப்பிலான விளைபொருள்களே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டிருந்தன. ஆனால், கடந்த 10 ஆண்டு காலத்தில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான விளைபொருள்கள் அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்காக எதையும் செய்யாத அந்த தலைவரை மக்கள் தண்டிக்க வேண்டிய நேரமிது.

வாக்குகளை வீணாக்க வேண்டாம்: ஒரு காலத்தில் 400 எம்.பி.க்களை கொண்டிருந்த கட்சியால் (காங்கிரஸ்), இப்போது 275 தொகுதிகளில் கூட வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. நாட்டில் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை. ஆனால், சாதாரண பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில்கூட அக்கட்சி போட்டியிடவில்லை. எந்த நேரமும் கவிழ்ந்துவிடக் கூடிய அரசால் வலுவான நாட்டை கட்டமைக்க முடியுமா? அத்தகைய கட்சிக்கு வாக்களித்து, மக்கள் தங்களது வாக்குகளை வீணாக்க வேண்டாம். வலுவான அரசை தேர்வு செய்ய வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

தேச பாதுகாப்பில் புதிய அணுகுமுறை: லத்தூர் பகுதியில் பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றுப் பேசியதாவது:

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டால், அது தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதார ஆவணங்களை அனுப்புவது வாடிக்கையாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் தேசப் பாதுகாப்பில் வலுவான புதிய அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. ஆவணங்களை அனுப்புவதற்கு பதில், பயங்கரவாதிகளை அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குகிறோம்.

பிரதமர் பதவியை ஆண்டுக்கு ஒருவர் என தவணை முறையில் வகிக்கும் திட்டத்தை "இந்தியா' கூட்டணி வைத்துள்ளது. இது நாட்டின் நலனுக்கு நல்லதா? நான் வளமான பாரதம் குறித்துப் பேசினால் காங்கிரஸின் இளவரசருக்கு (ராகுல் காந்தி) காய்ச்சல் வந்துவிடுகிறது.

நாட்டை கொள்ளையடித்தவர்கள் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர். கொள்ளையடித்த பணத்தை அவர்கள் திருப்பித் தந்தாக வேண்டும்.

காங்கிரஸூம் பிரச்னைகளும் "இரட்டை' சகோதரர்களாவர். நாட்டின் எந்தப் பிரச்னைக்கும் தீர்வுகாண அக்கட்சி முயற்சிக்கவில்லை. அவர்களால் நாட்டுக்கு கிடைத்தது வறுமை மட்டுமே' என்றார்.

வேட்பாளர்களுக்கு கடிதம்

புது தில்லி: "காங்கிரஸின் பிளவுபடுத்தும் கொள்கை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்று அறிவுறுத்தி, பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.

"மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது என்றபோதிலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் அந்த இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உள்ளன. எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பறித்து, தங்களின் "வாக்கு வங்கிக்கு' வழங்குவதே அவர்களின் திட்டம்.

இதேபோல், மக்களின் சொத்துகளை மறுபங்கீடு செய்வதும், ஆபத்தான சொத்து வாரிசுரிமை வரியை மீண்டும் செயல்படுத்துவதும் அவர்களின் விருப்பங்கள். இந்த விவகாரங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்று பிரதமர்அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com