சா்வதேச விண்வெளி நிலையப் பயணத்துக்கு ககன்யான் வீரா் சுபான்ஷு சுக்லா தோ்வு: இஸ்ரோ அறிவிப்பு
மாற்று வீரராக குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயா் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்.

~

~
புது தில்லி, ஆக. 2: ககன்யான் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 4 விண்வெளி வீரா்களில் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லவிருப்பதாக இஸ்ரோ வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இவருக்கு மாற்று வீரராக குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயா் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்.
ககன்யான் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு மனிதா்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னொட்டமாக, இந்த ஆண்டில் இந்திய விண்வெளி வீரரை சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய பிரதமா் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் அறிவித்தாா்.
இதன் முன்னேற்றம் குறித்து மக்களவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் அளித்துள்ள பதிலில், ‘ககன்யான் திட்டத்துக்காக தோ்ந்தெடுக்கப்பட்ட 4 வீரா்களும் தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி வீரா்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா். ஏற்கெனவே அவா்கள் ரஷியாவில் பயிற்சி மேற்கொண்டனா்.
அமெரிக்காவின் நாசாவுடனான கூட்டுப் பணியின் அங்கமாக ககன்யான் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 4 விண்வெளி வீரா்களில் ஒருவா், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட உள்ளாா்’ என்றாா்.
இந்நிலையில், சா்வதேச விண்வெளி நிலையப் பயணத்துக்கு குரூப் கேப்டன் சுக்லா தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பதை இஸ்ரோ வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

சுக்லாவுக்கு மாற்று வீரராக குரூப் கேப்டன் நாயா் தோ்வாகியுள்ளாா். இவா்கள் இருவரும் ஆகஸ்ட் 2024 முதல் வாரத்தில் இருந்து பணிக்கான பயிற்சியைத் தொடங்குவாா்கள் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...