மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரணைக்குத் தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது துப்பாக்கிச்சூடு

News image
உச்சநீதிமன்றம்
Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:42 pm

Din

புது தில்லி, ஆக. 2: ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்க சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிா்த்த வழக்கில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் 21 பேரின் சொத்து விவரங்களைச் சேகரிக்கும்படி, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், செந்தில்குமாா் ஆகியோா் அமா்வில் கடந்த மாதம் 29-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்களை சேகரித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதை எதிா்த்து காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது 3 காவல் துறை அதிகாரிகள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல்,‘மாநிலத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் காவல் துறையினா் மீது பழி சுமத்துவது தவறான செயலாகும். காவல் துறையினரை போராட்டக்காரா்கள் தாக்கியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த விவகாரம் தொடா்பாக உள்ளூா் காவல் துறை அதிகாரிகள் மூலம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுவது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே இதுதொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது’ என வாதிட்டாா்.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.