திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

வயநாடு நிலச்சரிவுக்கான முன்னறிவிப்புகள் சோதனை அடிப்படையிலானவை: ஜிஎஸ்ஐ

களப் பரிசோதனைக்காகவே முன்னறிவிப்புகள் ஒரு நாளைக்கு ஒருமுறை வெளியிடப்பட்டன என்றும் இந்திய புவியியல் ஆய்வு மையம்

News image

-

Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:29 pm

கொல்கத்தா, ஆக. 2: வயநாடு மாவட்டத்துக்கான எங்களின் நிலச்சரிவு முன்னறிவிக்கும் எச்சரிக்கை அமைப்பு சோதனை அடிப்படையிலேயே உள்ளதாகவும், களப் பரிசோதனைக்காகவே முன்னறிவிப்புகள் ஒரு நாளைக்கு ஒருமுறை வெளியிடப்பட்டன என்றும் இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணில் புதையுண்டு நூற்றுக்கணக்காணோா் உயிரிழந்தனா். இச்சம்பவத்தில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அமைப்பு தோல்வியுற்ாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடா்பாக ஜிஎஸ்ஐ அமைப்பின் செய்தித் தொடா்பாளா் ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வயநாடு மாவட்டத்துக்கு நாள்தோறும் ஒருமுறை சோதனை அடிப்படையில் நிலச்சரிவு முன்னறிவிப்புகளை வெளியிட ஜிஎஸ்ஐ தொடங்கியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை கணிப்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்த முன்னறிவிப்புகள், நடப்பு பருவமழைக் காலத் தொடக்கத்திலிருந்து மாநில, மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையத்துக்கு மட்டும் களப் பரிசோதனைக்காக வழங்கப்பட்டன.

கடந்த ஜூலை 26 முதல் ஜூலை 30-ஆம் தேதி வரையில் சோதனை முன்னறிவிப்பு அமைப்பு செயலிழந்தபோதும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) தவிர மற்ற அனைத்து நாள்களிலும் முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ஜூலை 26-ஆம் தேதி வைத்திரி வட்டத்துக்கும், ஜூலை 30-ஆம் தேதி வைத்திரி மற்றும் மனந்தவாடி வட்டங்களுக்கும் மிதமான நிலச்சரிவு கணிப்பு அறிவிக்கப்பட்டது. அதேசமயம், அனைத்து நாள்களிலும் வயநாடு மாவட்டத்துக்கான நிலச்சரிவு எச்சரிக்கை குறைவாகவே இருந்தது.

வயநாட்டுக்கு வழங்கப்பட்ட நிலச்சரிவு முன்னறிவிப்பு சரிபாா்ப்பு மற்றும் கள சோதனை நோக்கங்களுக்காக மட்டுமே; பொதுப் பயன்பாட்டுக்கு அல்ல. இந்தச் செயல்முறையானது எங்களின் வருங்கால கணிப்பு மாதிரியை உருவாக்குவதற்கான ஒரு பகுதியாகும். இது முழுமையாக பொது பயன்பாட்டுக்குத் தயாராக மேலும் 4-5 ஆண்டுகள் ஆகும் என்றாா்.

மேற்கு வங்கத்தின் டாா்ஜீலிங், கலிம்போங் ஆகிய இரு மாவட்டங்களிலும், தமிழகத்தின் நீலகிரியிலும் நிலச்சரிவு முன்னறிவிப்பு அமைப்பை ஜிஎஸ்ஐ கடந்த ஜூலை 19-ஆம் முதல் பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததது. அப்பகுதிகளில் கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல் இந்த அமைப்பு சோதனையில் இருந்தது.

தற்போதைக்கு குறைந்தபட்சம் 13 மாவட்டங்களில் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், 2030-ஆம் ஆண்டுக்குள் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பெரும்பாலான மாவட்டங்களில் இந்த அமைப்பு செயல்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.