அஸ்ஸாம் மாநிலம் நல்பாரி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அசோக் சர்மா பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் இணைய உள்ளார்.
ஆஸ்எஸ்எஸ் ஸ்வயம்சேவக்கில் இருந்த சர்மா, கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவில் இருந்தார். அவர் 2016ல் நல்பாரி தொகுதியிலிருந்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார், இருப்பினும், 2021 இல் எம்எல்ஏ பதவி மறுக்கப்பட்டது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் நெருங்கிய கூட்டாளியான ஜெயந்த மல்லபருவா தேர்தலில் போட்டியிட பாஜகவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சர்மா தலைமையிலான அமைச்சரவையில் மல்லபருவாவும் அமைச்சரானார். இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாக ஜெயந்த மல்லபருவாவால் தம்மை பலமுறை அவமதித்ததாக அசோக் சர்மா குற்றம் சாட்டினார்.
நல்பாரியில் எனக்கு சீட்டு வழங்கப்படவில்லை என்றாலும், கட்சிக்கு எதிராக நான் ஒருபோதும் கலகம் செய்யவில்லை. கட்சியில் என்னை விட இளையவரான மல்லபாருவாவிடம் எனக்கான மரியாதை இருக்க வேண்டும் என்பதுதான் நான் விரும்பியது. அசாமில் பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு இல்லாதபோது, நான் கட்சியின் பணிகளைச் செய்து வந்தேன். ஆனால் எனக்குத் தொடர்ந்து அங்கீகாரம் மறுக்கப்படுகிறது.
கட்சியை விட்டு வெளியேறுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்று சர்மா கூறினார். இதையடுத்து அவர் காங்கிரஸில் அடுத்த ஒரு வாரத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் வெள்ளம்: பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்கு ரூ.1000 கோடி தேவை! முதல்வர்

அன்பில் அவன்... அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தனின் படத் தலைப்பு விடியோ!

கேலி பண்றீங்களா? எனக்கு இப்படித்தான் பேசத் தெரியும்! கோபமடைந்த அமைச்சர் மரியவில்சன்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்





