மதம் மாறுவதாக மிரட்டிய காங். தலித் தலைவர்: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைது!

குஜராத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக மிரட்டிய காங்கிரஸ் கட்சியின் தலித் தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராஜூ சோலங்கி
கைது செய்யப்பட்ட ராஜூ சோலங்கி
Published on
Updated on
2 min read

குஜராத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக மிரட்டிய காங்கிரஸ் கட்சியின் தலித் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலத்தின் கோண்டல் தொகுதி எம்எல்ஏ கீதாபா ஜடேஜா மற்றும் அவரது கணவர் தனது மகனைத் தாக்கியதாகவும், இதுகுறித்து புகாரளித்தும் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தான் இஸ்லாம் மதத்திற்கு மாறப்போவதாக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலித் தலைவரான ராஜூ சோலங்கி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பாஜக எம்எல்ஏ கீதாபா ஜடேஜா அவரது கணவர் மற்றும் மகனுடன்
பாஜக எம்எல்ஏ கீதாபா ஜடேஜா அவரது கணவர் மற்றும் மகனுடன்

இதனைத் தொடர்ந்து, ராஜூ சோலங்கி, அவரது சகோதரர் ஜயேஷ், அவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோரை குஜராத்தின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று (ஆகஸ்ட் 3) போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், ராஜூவின் குடும்பத்தினர் 2014-ல் இருந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஜுனாகத் மாவட்ட உள்ளூர் குற்றப்பிரிவு பொறுப்பு காவல் ஆய்வாளர் ஜேஜே படேல் இந்தப் புகாரைப் பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னர் ராஜூவின் குடும்பத்தினர் கொலை முயற்சி, போலீஸ் ஒருவரைத் தாக்கியது, கொள்ளை, கலவரம் ஏற்படுத்துதல், மிரட்டி பணம் பறித்தல், கடத்தல் மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாகவும், ராஜூ இதற்கு தலைவனாக இருந்து வழிநடத்துவதாகவும் இந்த வழக்கில் போலீஸார் குறிபிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ராஜூ சோலங்கி
தலித் இளைஞரைத் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ மகன் மீது வழக்குப்பதிவு!

கடந்த ஜூலை 11 அன்று ராஜூ சோலங்கி தன் மகன் மீது 11 நபர்கள் தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி அதற்கு காரணமாக எம்எல்ஏ கீதாபா ஜடேஜா மற்றும் அவர் கணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்தத் தாக்குதல் குறித்தப் புகாரில் எம்எல்ஏ மகன் கணேஷ் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதில் மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் போனால் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக அவர் கூறியதைத் தொடர்ந்து அவர் மீதும், குடும்பத்தினர் மீதும் தற்போது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பழிவாங்குதல் நடவடிக்கை இல்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பரவலாக விமர்சனங்களையும் விவாதங்களையும் எழுப்பி வருகிறது.

கீதாபா ஜடேஜாவின் மகன் கணேஷ் ஜடேஜா மீது கடந்த மே மாதத்தில் ராஜூ சோலங்கியின் மகனான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் நகரத் தலைவர் சஞ்சய் சோலங்கியைக் கும்பலாகத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com