எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

2029-ல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி: அமித் ஷா!

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி 2029-ல் மீண்டும் ஆட்சியமைக்கும் என அமித் ஷா கூறியுள்ளார்.

News image
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Updated On :4 ஆகஸ்ட் 2024, 10:11 am

DIN

தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவின்றி இருப்பதாக எதிர்க் கட்சிகள் கூறி வருவதைத் தொடர்ந்து 2029-ல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மணிமஜ்ரா 24 மணி நேர நீர் வழங்கும் திட்டத்தைத் இன்று தொடங்கி வைத்த அமித் ஷா, அந்தக் கூட்டத்தில் பேசியபோது, “எதிர்க்கட்சிகள் என்ன சொன்னாலும் அதைக் குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். வருகிற 2029-லும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும், மோடியே திரும்பப் பிரதமராக வருவார்” என்று கூறினார்.
  

அது மட்டுமின்றி, ”எதிர்க்கட்சியினர் தேர்தலில் கொஞ்சம் வெற்றி பெற்றதாக நினைத்து வருகின்றனர். ஆனால், கடந்த 3 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற மொத்தத் தொகுதிகளை விட 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்ற தொகுதிகள் அதிகம் என அவர்களுக்குத் தெரியவில்லை.”

”மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு கட்சியான பாஜக வெற்றிபெற்ற மொத்த தொகுதிகள் எண்ணிக்கை எதிர்க்கட்சியினரின் மொத்தக் கூட்டணி வென்ற தொகுதிகளை விட அதிகம்.

இந்த ஆட்சியை நிலையற்றதாக ஆக்க விரும்பும் இவர்கள், இந்த அரசு நிலைக்காது என்று திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்கள்”

"எதிர்க்கட்சியினருக்கு நான் உறுதியளிக்கிறேன். தற்போதைய அரசு ஐந்து ஆண்டுகள் முழுவதும் ஆட்சியில் இருக்கும். அடுத்த ஆட்சிக் காலமும் இதே அரசின் ஆட்சி இருக்கும். எதிர்க்கட்சியினர் எவ்வாறு திறம்பட செயல்பட வேண்டுமெனக் கற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள்", என அமித் ஷா பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.