உ.பி.யில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பு: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்
உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க வேண்டும்.


உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்தில் 12 வயது சிறுமியை இருவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் பதார்சா நகர் பகுதியில் பேக்கரி நடத்தி வரும் மொயித் கான், அவரது ஊழியர் ராஜு கான் ஆகியோரை போலீஸார் கடந்த 30-ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த இருவரும் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அதை விடியோ காட்சியாக எடுத்ததாக போலீஸôர் தெரிவித்தனர். அந்தச் சிறுமி கர்ப்பமாக இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
அயோத்தியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கை அரசியலாக்க முயற்சிப்பவர்களை வெற்றி பெற அனுமதிக்கக் கூடாது. மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில், குறிப்பாக அயோத்தியில் அடைந்த தோல்விக்காக பாஜக பீதியடைந்துள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.20 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் மரபணு பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா கூறுகையில் ’அகிலேஷ் யாதவ் தனது முஸ்லிம் வாக்கு வங்கி தொடர்பாக கவலைப்படுகிறார். அதனால்தான் குற்றம்சாட்டப்பட்ட இருவரான முஸ்லிம்களுக்கும் மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோருகிறார்' என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில் ‘அயோத்தியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மொயித் கான், சமாஜவாதி கட்சியைச் சேர்ந்தவர். அவர் மீது சமாஜவாதி கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று குற்றஞ்சாட்டினார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை யோகி ஆதித்யநாத் கடந்த வாரம் சந்தித்தார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மொயித் கானின் பேக்கரியை அயோத்தி மாவட்ட நிர்வாகம் சனிக்கிழமை இடித்து தரைமட்டமாக்கியது. அந்த பேக்கரி, ஒரு குளத்தின் மீது சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்ததாக அயோத்தி மாவட்ட ஆட்சியர் சந்திரா விஜய் சிங் தெரிவித்தார்.
பாஜக குழுவினர் சந்திப்பு: இதனிடையே, அயோத்தியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை மூன்று பேர் அடங்கிய பாஜக குழு சந்தித்தது. அக்குடும்பத்தினருடன் விரிவாக விவாதித்ததாக அக்குழுவினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...