வயநாட்டில் நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கியிருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டுள்ள உடல்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதற்காக டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும், இன்று(ஆக. 4) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

சூரல்மலையில் மண்ணில் புதைந்துள்ள உடல்களை கண்டுபிடிக்க டிரோன்கள் மூலம் தேடுதல் பணி - படம் | பிடிஐ
இதுவரை 49 டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்டுள்ள உடல்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்ல மொத்தம் 149 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதுவரை 221 உடல்கள், 166 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 380 உடற்கூராய்வுகள்(உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் உள்பட) மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சூரல்மலையில் மண்ணில் புதைந்துள்ள உடல்களை கண்டுபிடிக்க டிரோன்கள் மூலம் தேடுதல் பணி 6-வது நாளாக தொடருகிறது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







